வேடுவ வேடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள்! களைகட்டிய வேட்டை திருவிழா!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினுடைய வருடாந்த உற்சவம் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் நேற்றைய தினம் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினுடைய வேட்டை திருவிழா மிகவும் சிறப்பாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் இடம்பெற்றது
நேற்று மாலை 4 மணியளவில் ஆலயத்திலே எம்பெருமானைக் காண விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து எம்பெருமான் வேட்டையாடுவதற்காக சென்றிருந்தார் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேடுவ வேடம் தரித்து இந்த வேட்டை திருவிழாவிலே பங்கெடுத்து இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகள் தொடர்ந்து ஆலயங்களில் பக்தர்களின் வருகை குறைவாக இருந்த நிலையில் ராணுவ போலீஸ் பாதுகாப்போடு இடம்பெற்று வருகின்ற இந்த ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது
from onlinejaffna.com https://ift.tt/2SigBzV