இலங்கையில் 1000 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள்! தேரருக்கு பயந்து இதை செய்யவில்லை.. ரிசாட்


இந்த நாட்டுக்குள் முஸ்லிம்கள் 1000 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்கள் ஒருபோதும் ஆயுத கலாச்சாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல என முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (14) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் சகவாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமா செய்தோ.பதவிகளை ஏற்பதாக இருந்தாலும் அனைவரும் ஒன்றாகவே ஏற்போம்.

எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் நாம் தயாராக உள்ளோம். 

நாம் பதவி விலகியது ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பயந்து அல்ல. நாட்டுப் பற்றுக் காரணமாகவே நாம் இராஜினாமா செய்தோம்.

இந்த நாட்டுக்குள் முஸ்லிம்கள் 1000 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்கள் ஒருபோதும் இந்த நாட்டில் ஆயுதக் கலாச்சாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்லர். 

பயங்கரவாதி சஹ்ரான் குழுவினர் செய்த பயங்கரவாத நடவடிக்கைக்கு முழு முஸ்லிம் சமூகமும் தொடர்புபட்டவர்கள் அல்லர்.எனக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் என்னிடம் கூறினார். 

அவர் இது குறித்து சபாநாயகருக்கும் அறிவித்துள்ளதாக கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரின் தீர்மானம் இதுவாகும். 

இடையில் உள்ளவர்கள் பற்றி எனக்கு எதனையும் கூற முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மேலும் கூறினார்.



from onlinejaffna.com https://ift.tt/2jSItxJ