இலங்கையில் வேகமாக பரவும் ஆபத்து! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டில் தற்பொழுது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நுளம்புகளின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் டெங்கு தேசிய ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்கு, தெற்கு, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களும், கண்டி மாவட்டமும் டெங்கு நோய் பரவல் அதிகரித்த இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இதேநேரம் இந்த மாதத்தில் மாத்திரம் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஆகவே நுளம்புகள் பெருகக் கூடிய இடங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
from onlinejaffna.com https://ift.tt/2jZ3Ptp