கல்முனையில் நாளை மறுநாள் கணக்காளருக்கு வரவேற்பு!


அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையின்போது கணக்காளர் நியமனத்திற்கான வாக்குறுதி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன், உத்தியோகபூர்வ கடிதமும் வழங்கப்பட்டிருந்தது. எனினும், இன்றும் கணக்காளர் இன்று வருகை தரவில்லை.

இவ்விடயம் குறித்து உப பிரதேச செயலளாரை தொடர்பு கொண்ட போது, அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் விடுமுறையில் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.

எனினும் எதிர்வரும் புதன்கிழமை(17) அன்று புதிய  கணக்காளருக்கு வரவேற்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் கடமையை உத்தியோக பூர்வமாக அவர் பொறுப்பெடுப்பார் என தெரிவிக்கப்பட்டது.



from onlinejaffna.com https://ift.tt/2jXGhFe