ஜனாதிபதியின் மரண தண்டனைத் தீர்மானம்: மஹிந்த ராஜபக்ஸ கருத்து


மரண தண்டனை என்பது நாட்டின் சட்டத்தில் காணப்பட வேண்டும் எனவும், இருப்பினும் அதனைச் செயற்படுத்துவது அவசியமற்றது எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

பிலியந்தல சிறி திஸரன சமய மத ஸ்தானத்தில் நேற்று (15) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க யுகத்தில் இருவரை தூக்கில் போட்ட போது நிறுத்தப்பட்டதே இந்த மரண தண்டனை சட்டமாகும். ஜனாதிபதி அதனை மீண்டும் ஆரம்பிக்கப் போகிறார். அவர் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் போதைப் பொருள் வியாபாரத்தை இல்லாமல் செய்யலாம் என நினைக்கின்றார். அது ஜனாதிபதியின் நம்பிக்கை.

இருப்பினும், அதிகமானோர் அது தேவையற்ற ஒன்று என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். மரண தண்டனைச் சட்டம் இந்த நாட்டில் மாற்றப்பட வேண்டியதில்லை. அதனைச் செயற்படுத்தாமல் இருப்பதுதான் சிறந்தது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டார். 



from onlinejaffna.com https://ift.tt/2Gc4xew