ஆபாசப்பட அழகியால் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஏற்பட்ட பரபரப்பு!



லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியின் இடையில் ஆபாச இணையத்தளமொன்றை விளம்பரப்படுத்த, மைதானத்திற்குள் நுழைய முயன்ற முன்னாள் ஆபாசப்பட நடிகையொருவரால் பரபரப்பு எழுந்தது.

எலெனா வுலிட்ஸ்கி (47) என்ற பெண்மணியே மைதானத்திற்குள் நுழைய முயன்றார்.

‘விட்டலி அன்சென்சர்டு’ என்ற ரஷ்ய ஆபாச இணையத்தளத்தை நிறுவியுள்ள விட்டலி என்பவரின் தாயாரே இந்த எலெனா ஆவார். எக்ஸ் தரப்படுத்தலை இந்த இணையம் பெற்றுள்ளது.

இந்த இணையத்தை பிரபலப்படுத்த அண்மையில் ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் ஆபாச நடிகை கின்சே வொலன்ஸ்கி மைதானத்திற்குள் திடீரென நுழைந்திருந்தார். நீச்சலுடையில் நுழைந்த அந்த அழகி, விட்டலியின் காதலி ஆவார். அவரது நீச்சலுடையில் ‘விட்டலி அன்சென்சர்டு’ என எழுதப்பட்டிருந்தது.

அதே வாசகங்களுடன் நேற்றும் இந்த பெண்மணி மைதானத்திற்குள் நுழைய முயன்றார். அவரை பாதுகாவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வௌியே கொண்டு சென்றனர்.

கின்சே வொலன்ஸ்கி- சம்பியன்ஸ் லீக்கில்
சம்பியன்ஸ் லீக்கில் மைதானத்திற்குள் உள்நுழைந்த அவர், கோபா அமெரிக்கா கிண்ண இறுதிப் போட்டி மைதானத்திற்குள்ளும் நுழையும் திட்டத்துடன் பிரேசில் சென்றார். எனினும் மைதானத்திற்குள் அவரை காவலர்கள் கைது செய்து, சிறிய சிறைவாசத்தின் பின் வெளியேறியுள்ளார்.

“30 வயதிற்குள் ஆபாசப்பட உலகிலிருந்து வெளியேறி விடும் திட்டமே என்னிடமேயுள்ளது. அதற்காக வலைத்தளத்தை பிரபலப்படுத்தும் திட்டங்களை தீட்டி வருகிறேன். சம்பியன்ஸ் லீக்கில் மைதானத்திற்குள் நுழையும் முன்னர் எனது இன்ஸ்டகிராமில் 230,000 பேர் பின்தொடர்ந்தனர். இப்போது அது 2 மில்லியனை கடந்து விட்டது“ என மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.






from onlinejaffna.com https://ift.tt/2Y7KisA