30 வருடமாக காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தாய் காலமானார்!


30 வருடமாக காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த தாயார் ஒருவர், மகனை காணாமலேயே காலமாகியுள்ளார்.

கடந்த 1999ம் ஆண்டு எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட வேலுப்பிள்ளை தியாகராஜா (ரஞ்சன்) என்ற இளைஞரின் தாயாரான வேலுப்பிள்ளை வியாழம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

தனது மகனை தேடி கடந்த 29 வருடங்களாக பல்வேறு போராட்டங்களில் அவர் ஈடுபட்டிருந்தார்.

தனது மகனை தேடி மனித உரிமை ஆணைக்குழுக்கள், மற்றும் ஆணைக்குழுக்களிலும் அவர் வாக்குமூலங்கள் வழங்கியிருந்தார்.

எனினும், தனது மகனை காணாமலேயே அவர் உயிரிழந்துள்ளமை பலரையும் கவலைகொள்ளச்செய்துள்ளது.

இந்த நிலையில் கேப்பாப்புலவின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் அவரிற்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.



from onlinejaffna.com https://ift.tt/2JMjyoG